WELCOME TO MURARBADU

ANY WHRE ANY TIME CONTACT MURARBADU.BLOGSPOT.COM +917373118517 +918144684433

  • Events
  • Artists
  • About us
  • Gallery
    • Gallery 1 col
    • Gallery 2 cols
    • Gallery 3 cols
  • Our blog
  • Contact

Announcements

  • Aenean sodales dapibus.
    more
  • Pellentesque auctor nisl
    more
  • Lorem ipsum dolor amet.
    more
  • Consectetuer adipiscing.
    more
  • Elit sed diam nonummy.
    more
  • Pellentesque auctor nisl.
    more
  • Vestibulum mollis, nisl.
    more
  • Quisque lectus dui.
    more
3:37:00 am

அஸ்ஸலாமு அலைக்கும்

எறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி

அ. முஹம்மது கான் பாகவி

இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் (கி.மு. 1032 - கி.மு. 975) ஓர் பேரரசர். ஒரே நேரத்தில் முழு உலகையும் ஆண்ட நால்வரில் ஒருவர். பெரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவர்.

சுலைமான் (அலை) அவர்களின் படையில் மனிதர்கள் மட்டுமன்றி ஜின்கள், பறவைகள் ஆகியவையும் இடம்பெற்றிருந்தன. அதனால் பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவற்றின் மொழிகளும் அன்னாருக்குத் தெரியும். காற்று அவர்களுக்குப் பணிவிடை செய்தது. தீர்ப்பு வழங்குவதில் வல்லவர்; நேர்மையாளர்.

ஒருமுறை அவர்களின் பிரமாண்டமான படைகளின் அணிவகுப்பு நடந்தது. ஜின்கள், மனிதர்கள், பறவைகள் புடைசூழ பவணி வந்தார்கள். வழியில் ஒரு பள்ளத்தாக்கைக் கடக்க வேண்டியிருந்தது. அதில் எறும்புகள் கூட்டமாக வாழ்ந்த ஓடை ஒன்றும் இருந்தது.

அப்போது ஓர் எறும்பு பேசியதை நபி சுலைமான் (அலை) அவர்கள் கேட்டு முறுவலித்தார்கள். இதைத் திருக்குர்ஆன் இப்படிச் சொல்லும்.

அவர்கள் எறும்புகளின் ஓடைக்கருகே (வாதிந் நம்ல்) வந்தபோது ஓர் எறும்பு, “எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் (மஸாகின்) நுழைந்துவிடுங்கள். சுலைமானும் அவருடைய படையினரும் உங்களை மிதித்துவிட வேண்டாம்” என்று கூறியது. அது கூறியதைக் கேட்டு சுலைமான் புன்னகைத்துச் சிரித்தார். (27:18,19)

இங்கு ‘எறும்பு ஓடை’ என்பதைக் குறிக்க ‘வாதிந் நம்ல்’ எனும் சொற்றொடர் ஆளப்பட்டுள்ளது. நம்லத்-எறும்பு; நம்ல்-எறும்புகள். ‘வாதீ’ என்பதற்கு பள்ளத்தாக்கு (Conyon), கணவாய் (Ravine), மலை இடுக்கு (Gully), இடுக்கு வழி (Gorge), ஓடை (Rivulet) ஆகிய பொருள்கள் உள்ளன.

இந்தச் சொல்லாக்கத்தைப் பார்த்து கீழை அறிஞர்கள் சிலர் நகைத்ததுண்டு. ஏனெனில், புற்றுகளில் எறும்பு இருக்கும்; மண் தரையில் வழியமைத்து சிறிய அளவில் வீடுகளை அமைத்து வாழும். எறும்புகளுக்குப் பெரிய அளவில் ஓடையோ சுரங்கமோ எங்கே உள்ளது என்று அவர்கள் குர்ஆன்மீது வினா தொடுத்தார்கள்; அதன் நேர்மையில் கல் எறிந்தார்கள்.

இதைக் கருத்தில் கொண்டுதானோ என்னவோ நம்மில் சிலரும் ‘வாதிந் நம்ல்’ என்பதற்கு ‘எறும்புப் புற்று’ என்றே பொருள் செய்துவருகிறோம். உண்மையில் புற்றைக் குறிக்க இவ்வசனத்தில் வேறொரு சொல் (மஸாகின் - குடியிருப்புகள்) ஆளப்பெற்றிருப்பது கவனத்திற்குரியது.

ஆக, எறும்புக்கு ஓடையோ சுரங்கமோ இல்லை என்றே உலகம் கருதிவந்த நிலையில் அண்மையில் அப்படி ஒன்று உண்டு என்பதை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதுதான் வியப்பு.

பிரேசிலில் அகழ்வாராய்ச்சி

பிரேசில் நாட்டில் அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் பூமிக்கடியில் எறும்புகளின் ஒரு நகரமே கண்டுபிடிக்கப்பட்டது. அதில் எறும்புகளுக்கான சாலைகள், தோட்டங்கள் என எல்லாம் உள்ளன. சீனாவின் பெருஞ்சுவரைப் போல மிகப்பெரும் அற்புதமாக இது காட்சியளிக்கிறது. பல மில்லியன் எறும்புகள் சேர்ந்து இச்சாதனையைப் புரிந்துள்ளன.



அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள்

இந்த எறும்பு நகரத்தில், பொதுச்சாலைகள், கிளை நடைபாதைகள், பூங்காக்கள் உள்பட ஒரு நகரத்திற்கு வேண்டிய எல்லா கட்டமைப்புகளும் உள்ளன. இதுதான் உலகிலேயே எறும்புகளின் பெரும்கூட்டம் வசிக்கும் இடமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட எறும்புப் புற்றுகொட்டப்படும் வெள்ளை சிமிண்ட்

காற்று வாங்குவதற்காகக் கால்வாய் போன்று எறும்புகள் தயாரித்துள்ள இடைவெளிகளில் 10 டன் வெள்ளை சிமிண்டை முதலில் நிபுணர்கள் கொட்டினார்கள். இதனால் அக்கால்வாய்கள் வலுவாகவும் உறுதியாகவும் மாறக்கூடும். பூமியின் மேற்பரப்பிற்குக் கீழே 8 மீட்டர் ஆழத்தில் 46.5 ச.மீட்டர் பரப்பை நிரப்புவதற்காக சிமிண்ட் கொட்டும் பணிக்கே 10 நாட்கள் பிடித்தது.

ஒரு மாதத்திற்குப்பின், பேராசிரியர் லூயிஸ் ஃபோர்ஜி தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு பூமியை அகழும் பணியைத் தொடங்கியது. அப்போதுதான் எறும்புகளின் இந்தப் பிரமாண்டமான நகரத்தைக் கண்டுபிடித்து, சீனப் பெருஞ்சுவர் போன்ற உலக அற்புதம் இது என்று வர்ணித்தனர்.

எறும்பின் ஆற்றல்

கட்டமைப்புகளை உருவாக்குவதில் வியத்தகு ஆற்றல் பெற்றது எறும்புக் கூட்டம். ஒவ்வோர் எறும்புக்கும், தன் எடையைப்போல் 50 மடங்கு எடையைச் சுமக்கும் ஆற்றல் உண்டு. அதைத் தூக்கிக்கொண்டு பல பத்து கி.மீ. தூரம் நடக்கவும் அதற்கு முடியும். இதைத் தொடர்ச்சியாகத் திரும்பத் திரும்பச் செய்யும் திறன் படைத்தது.

இந்த அடிப்படையில்தான், இந்தச் சுரங்கத்தைக் கட்ட சுமார் 40 டன் மண்ணை ஒரு பெரிய எறும்புக் கூட்டம் தோண்டி எடுத்துள்ளது. இதன்மூலம் எறும்புகள் புதிய காற்றைச் சுவாசிக்கவும் சுருக்க வழியில் பயணிக்கவும் வழி பிறந்தது.

இந்த எறும்பு நகரத்தில், அறைகளை இணைக்கும் முதன்மைச் சாலைகள் உண்டு. புற்றுகளுக்குச் செல்லும் குறுக்குச் சாலைகளும் உண்டு. அங்கு சிறு தானியங்களையும் சேமித்த உணவுகளையும் எறும்புகள் பாதுகாக்கின்றன. அவ்வாறே, எறும்புகள் கொண்டுவந்து சேர்த்த பச்சைப் புற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களும் உண்டு. இவை எறும்புகளின் முட்டைப் புழுக்களை (Larva) காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

எறும்பு நகரம் அல்லது சுரங்கம்
குடியிருப்பு அறைகள்

இப்போது சொல்லுங்கள்! அந்த வசனத்தில் எறும்பு ஓடை, அல்லது பள்ளத்தாக்கு (வாதிந் நம்ல்) என்று அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது எவ்வளவு பொருத்தம்! எவ்வளவு பெரிய ஆராய்ச்சி! எத்துணை பெரும் உண்மை! சுப்ஹானல்லாஹு!

----------------------------------
Watch "Huge Ant City in Brazil.flv" on YouTube - https://youtu.be/D_TTb15mZx4

11:18:00 am

அஸ்ஸலாமு அலைக்கும்

மதினா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம். எங்குமே பேரமைதி. வானிலே ஆங்காங்கே கண்சிமிட்டும் நட்சத்திரங்கள். இவ்வேளையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார்.
நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு மனிதர் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

அவரை நோக்கி உமர் (ரலி) இரண்டுமுறை ஸலாம் கூறியும் அவர் பதில் ஏதும் கூறாததால், மூன்றாவது முறையும் ஸலாம் சொன்னார். அம்மனிதர் ஆவேசப்பட்டு, பக்கத்தில் கிடந்த வாளை எடுத்துக் கொண்டு, “நீ போக மாட்டாயா? உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரனாகக் கூடத் தெரியவில்லையே? வழிப்பறி கொள்ளையனாகவல்லவா தோன்றுகிறது?’ எனக் கத்தினார்.

உமரோ அமைதியாக, “நண்பரே! நீர் நினைப்பதுபோல் நான் பிச்சைக்காரனுமல்ல, வழிப்பறி கொள்ளையனுமல்ல. உம்மைப் பார்த்தால் வெளியூர்க்காரர்போல் தோன்றுகிறது. அதனால்தான் உம்மோடு பேச நினைத்தேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கையில் கூடாரத்திலிருந்து பெண்ணின் கூக்குரல் கேட்டது. திடுக்கிட்ட உமர் (ரலி) அவர்கள், “அங்கே கூக்குரலிடுவது, யார்?’ என வினவ, “அவள் என் மனைவி’ என அம்மனிதர் கூற, “அவர் ஏன் கூச்சலிட வேண்டும்?” என்று உமர் கேட்டார்.

“பிழைப்பைத் தேடி, இந்நாட்டிற்கு வந்தோம். வந்த இடத்தில் பிரசவ வேதனை தொடங்கிவிட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல் நான் இங்கு கவலையோடு உட்கார்ந்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார் அந்த மனிதர்.

“மருத்துவச்சியை அழைத்து வருகிறேன்’ என உமர் (ரலி) எழுந்ததும், “வேண்டாம், வேண்டாம்’ எனப் பதறினார் அம்மனிதர். “ஏன் மருத்துவச்சியை வேண்டாம் என்கிறீர்?’ என உமர் வினவியதும், “மருத்துவச்சிக்குக் கொடுக்க என்னிடம் பணமில்லை’ என்றார் சோகமுடன். “நான் அழைத்து வரும் மருத்துவச்சி, பணம் வாங்க மாட்டாள்; கவலைப்படாதீர்கள்’ என்று சொல்லிக் கொண்டே வேகமாக வெளி நடந்தார் உமர்.

வீட்டை அடைந்ததும் தன்னுடைய மனைவியை அழைத்து உடனே புறப்படுமாறு உத்தரவிட்டார். “நீங்கள் சாப்பிடவில்லையா?’ என மனைவி கேட்க, “இல்லை. அந்தச் சாப்பாடு வேறொருவருக்குத் தேவை’ என்றார். “கொஞ்சம் பாலாவது அருந்துங்களேன்’ என்றதும், “வேண்டாம். பிரசவ வேதனையிலிருக்கும் அந்தப் பெண்மணிக்கு அது தேவைப்படலாம். உடனே அவற்றை எடுத்துக் கொண்டு புறப்படு. நான் ஒட்டகத்தை ஓட்டி வருகிறேன்’ என்று புறப்பட்டார் உமர்.

சிறிது நேரத்தில் உமரும், அவருடைய மனைவியும் கூடாரத்தை அணுகியதும், மனைவியை கூடாரத்திற்குள் அனுப்பிவிட்டு உமர் அவர்களும், அம்மனிதரும் வெளியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

“இந்நாட்டிற்கு உமர்தானே இப்போது தலைவர்?’

“ஆமாம்.’

“அவர் மிகவும் கடினமானவர் என்கிறார்களே!’

“அது அவரவர் கருத்தைப் பொறுத்தது.’

“நீர் உமரை பார்த்திருக்கிறீரா?’

“பார்த்திருக்கிறேன்.’

“அவரிடம் நிறையப் பணம் இருக்குமே?’

“அவரிடம் ஏது பணம்?’

“என்ன வேடிக்கை, ஒரு அரசாங்கத் தலைவர் பணம் சேர்த்து வைக்காமலா இருப்பார்?’

“அப்படி பணம் சேர்க்கும் யாரையும் நாங்கள் தலைவராகத் தேர்ந்தெடுப்பதில்லை.’

இச்சமயத்தில் கூடாரத்திலிருந்து மருத்துவச்சியின் குரல் ஒலித்தது. “ஜனாதிபதி அவர்களே! உங்கள் நண்பருக்கு வாழ்த்துக் கூறுங்கள். அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.’

“ஜனாதிபதி’ என்ற சொல்லைக் கேட்டவுடன் அந்த மனிதர் உடல் நடுங்கி, உமரின் காலில் விழச் சென்றார். அம்மனிதரை அணைத்துக் கொண்டு, “நண்பரே! ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? என்ன நடந்துவிட்டது?’ என அன்போடு கேட்டார் ஜனாதிபதி உமர் அவர்கள்.

“அப்படியானால் மருத்துவம் பார்த்த அந்தப் பெண்மணி யார்?’ என அம்மனிதர் வினவ, “அவர் எனது மனைவி’ என உமர் கூறவும், ஆச்சரியத்தால் திகைத்துப்போன அந்த மனிதர், நன்றி கலந்த குரலில் கேட்டார், “இந்த நாட்டின் தலைவரான தாங்களா இவ்வளவு ஊழியம் எனக்குச் செய்தீர்கள்?’

“இதில் வியப்படைய என்ன இருக்கிறது நண்பரே? ஒரு நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன்தானே! நாளை பள்ளிவாசலுக்கு வாருங்கள். உங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்வோம்’ எனக்கூறி புறப்பட்டார் உத்தமர் உமர் (ரலி) அவர்கள்.

இத்தகைய உயர் பண்பு நலன்களுடன் ஆட்சி செய்தவர் உமர் (ரலி) அவர்கள்.

1:07:00 am

Tntj live tv app for android mobile

https://play.google.com/store/apps/details?id=com.tntj.tntjwebtv
Newer Posts Home Older Posts
Subscribe to: Posts (Atom)

Categories

  • A MOVIE
  • dr
  • health
  • ICEC_MURARBADU.YAHOO.GROUPS
  • ISLAM
  • KAVITHAI
  • new tamil mp3
  • puplic
  • tech
  • இந்தியன் lovers
  • இஸ்லாம்
  • நித்யா

Photostream

bjghtotfnbovtytvobuiygrcvbhijpiutgbgu
M.FROZALI MURARBADU +917373118517

My site is worth$967.28Your website value?

ANY WHERE ANY TIME CONNECTING PEOPLE
frozali. Powered by Blogger.
very cheap calling card india mobile 1200 min land line 1000 min just 75 saudi riyal only contact: +966533693467

Followers

Blog Archive

  • May (2)
  • Jul (7)
  • Mar (48)
  • May (1)
  • Jun (3)
  • Jun (1)
  • Jun (5)
  • Jul (1)
  • Dec (1)
  • Apr (1)

Popular

    Mumbai    Meri     Jaan......... Mumbai Meri Jaan.........
    no image Chennai Rain
    no image அஸ்ஸலாமு அலைக்கும்
    no image அஸ்ஸலாமு அலைக்கும்
    no image சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. அருமையான தகவல்.
    no image கண்ணில் உள்ள பவர் பிரச்னையை இல்லாமல் செய்து விடலாம்’ என்று சொல்லும் கண் டாக்டர்கள் பலர் கண்ணாடி அணிந்திருக்கிறார்களே ஏன்?
    no image [ICEC_MURARBAD] இறைநம்பிக்கைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்
    no image [ICEC_MURARBAD] ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? கண்காட்சி பெயரால் மதவெறி!
    (no title) (no title)
    no image சக்கரை வியாதி (டயாபட்டீஸ்) >>சர்க்கரை நோய் வரக் காரணங்கள்

Hello there!

Follow us

Bookmark and Share

Tags

  • A MOVIE (12)
  • dr (1)
  • health (5)
  • ICEC_MURARBADU.YAHOO.GROUPS (1)
  • ISLAM (9)
  • KAVITHAI (4)
  • new tamil mp3 (2)
  • puplic (1)
  • tech (4)
  • இந்தியன் lovers (1)
  • இஸ்லாம் (1)
  • நித்யா (1)
Premium Blogger Templates
Copyright © 2013 WELCOME TO MURARBADU - and Free Blogger Templates.