நித்யா சக்தி!!!
Posted by
frozali
at
6:31:00 pm
பராசக்தி ஸ்டைல்ல, நம்ம நித்யானந்தா கோர்ட்டில் பதில் கூறுகிறார்...
இதற்கு மேலும் உங்களுக்கு நித்யானந்தா மீது நம்பிக்கை வரவில்லை என்றால், நீ ஒரு தமிழனே இல்லை என்றுதான் நான் நினைப்பேன்..
Subject: நித்யா சக்தி!!!
ஹரித்துவாருக்கு ஓடி, ஒளிந்து இருந்து கொண்டிருந்த நித்யானந்தாவை நம் தமிழ் நாடு போலீஸ் அங்கு போய் கோழியை அமுக்குவது போல் “லபக்”கென்று பிடித்து கொண்டு வந்து விடுகிறது. அடுத்த நாள் அவர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார். மனதில் வலிமை, எண்ணத்தில் நேர்மை(!), பேச்சில் திறமை (!), காசில் கடுமை என்று கனகச்சிதமாக இருந்த நித்யானந்தா, பெண் விஷயத்தில் இருந்த பலவீனத்தால் மாட்டிக்கொண்டதில் விழி பிதுங்கி குற்றவாளிக்கூண்டில் நிற்கிறார். அவரின் லீலையை ரிலீஸ் செய்த சன் டிவியே அவரின் நீதி மன்ற காட்சிகளையும் நேரலையில் ஒளிபரப்புகிறது. என்ன தான் பயம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் தரப்பு நியாயத்தை தைரியமாக கூறி அவர் வாதாடும் பரபரப்பு காட்சிகள் இனி உங்கள் விழிகளுக்காக..!!
இதோ காட்சி..!
நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் நின்று கொண்டிருக்கிறார் நித்யானந்தா. நீதிபதி அவரை பார்த்து “நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா..?”. அவரின் சம்மதத்தை கூட எதிர்பார்க்காமல் நித்யானந்தா தன் பேச்சை தொடங்குகிறார். பேசித்தானே அவர் இலட்சக்கணக்கான மக்களை கவர்ந்து காவி உடைக்குள் திணித்தார்..!! நித்யானந்தா தன் தரப்பு வாதத்தை தொடங்குகிறார்..!!!
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாக ஊரை ஏய்த்துப் பிழைக்கும் ஒண்ணாம் நம்பர் கேடி சாமியார்களில் நானும் ஒருவன்.
பரமஹம்ச நித்யானந்தா சுவாமிகள் என்று கூறி ஊரை ஏமாற்றினேன். தியானம் என்கிற பேரில் தில்லுமுல்லுகள் செய்தேன். கண்ட நடிகைகளுடன் கதவை திறந்து வைத்து “கசமுசா” பண்ணினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.!! நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் இதை எல்லாம் நான் மறுக்கப்போகிறேன் என்று..!! இல்லை..நிச்சயமாக இல்லை..!!
பரமஹம்ச நித்யானந்தா சுவாமிகள் என்று கதை அளந்தேன். ஏன்.. மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா..? மனதெல்லாம் கஷ்டங்களுடன் வருபவர்களிடம் காசை வாங்கி கொண்டு ஆறுதல் தரவேண்டும் என்பதற்காக..!!
கண்ட நடிகைகளுடன் கதவை திறந்து வைத்து “கசமுசா” பண்ணினேன். ஏன் அவர்களிடம் சல்லாபித்து இன்ப லோகததை காணவா..? இல்லை..மக்கள் நடிகைகள் என்ற மலையாள மாமிகளின் மாயையிலிருந்து வெளி வரவேண்டும் என்பதற்காக..!
தியானம் என்கிற பேரில் தில்லுமுல்லுகள் செய்தேன். மக்களை மயக்கி கன்னக்கோல் வைக்கவா..? இல்லை... திருட்டுத்தனம் செய்து மாட்டிக்கொண்டாலும் அது தியானத்தின் ஒரு பகுதி என்று சொல்லி தப்பித்து விடவேண்டும் என்பதற்காக..!!
உனக்கேன் இவ்வளவு அக்கறை.. உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..
நானே பாதிக்கப்பட்டேன்...நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுய நலம் என்பீர்கள். எனது இந்த சுயநலத்திலே பொது நலமும் கலந்திருக்கிறது. நடிகைகளுடன் சல்லாபித்தாலும் நாளொரு பேட்டாவும், பொழுதொரு சன்மானமுமாக அள்ளிக்கொடுத்தேனே.. அதைப்போல..!! என்னை குற்றவாளி, அயோக்கியன் என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையை சற்றே திரும்பி பார்த்தால் நான் செய்த திருட்டுத்தனங்கள், அதற்காக வாங்கிய அடிகள், அதனால் கிடைத்த அவமானங்கள் விளங்கும்..!! மனதை வருடும் மந்திரங்கள் இல்லை என் பாதையில், மனசை கெடுக்கும் தந்திரங்கள் நிறைந்திருக்கின்றன. கடவுளை தீண்டியதில்லை நான். ஆனால் காமத்தின் எல்லையை தாண்டி இருக்கிறேன். கேளுங்கள் என் ”தில்லுதுர” கதையை நீதிபதி அவர்களே..! என்னை ஜெயிலுக்குள் விட்டு டவுசரை கழட்டுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..!!
போலி ஆன்மீகம் பொங்கி வழியும் இந்தியாவில், கண்டவர்களை எல்லாம் கடவுளர்களாக நினைக்கும் தங்க தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான்..! பிறக்க ஒரு ஊர்.. பிழைக்க ஒரு ஊர்..! ஆன்மீகம் என்ற பெயரில் ஊரை அடித்து உலையில் போடும் சாமியார்களை நம்பி ஏமாறும் தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா..? திருவண்ணாமலையில் பிறந்து, காவிரிக்கரையில் அமர்ந்து வாயில் வந்ததை எல்லாம் ஜோஸியம் என்று வாந்தி எடுத்துக்கொண்டிருந்தேன். ஆரம்ப வியாபாரமே வெகு சிறப்பாக தான் நடந்தது.
என்னை கண்டவர்கள் கடவுள் அவதரித்து விட்டார் என்றனர். தொட்டால் துலங்குகிறது என்றார்கள். பார்வை பட்டால் பலன் கிடைக்கிறது என்றார்கள். ஆனால் கடைசியில் நடந்ததை நினைத்தாலோ கண்ணைக்கட்டுகிறது..!! வீடியோ மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ரஞ்சிதா, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். மனதை பறிகொடுத்தேன். பின் பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். வீடியோவில் படமாக்கப்பட்டேன். அதனால் அடிபட்டேன்.. ஆத்திரப்பட்டேன்... ஆவேசப்பட்டேன்.. ஒன்றும் வேலைக்காகாததால் மாட்டிக்கொண்டேன்.
அவள் பெயரோ ரஞ்சிதா..! கேட்டாலே கிறக்கம் கொடுக்கும் பெயர்..!! ஆனால் பேச்சில் உண்மை இல்லை.! செயலில் நன்மை இல்லை..!! ஆதரவாய் கட்டிக்கொண்ட ஆர்மிக்காரனுக்கும் அல்வா கொடுத்து விட்டாள். அவளுக்கு கண்ணி வீசினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் கண்டதையும் கேட்டனர். வீடியோ எடுப்பதில் ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் லெனின் என்கிற பிரேமானந்தா, இவன் பண ஆசையில் என் அறைக்குள் பல முறை கேமரா வைக்க முயன்றான். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் ”கதவை மூடு.. கேமரா தொலையட்டும்..!!” என்று அப்போதே அவனுக்கு ஆப்பு வைத்திருப்பேன்..!!
நான் ஏமாற்றாத நாளில்லை..!! ஏமாறாத பரமஹம்ச பக்தனும் இல்லை..!! நான் மட்டும் நினைத்திருந்தால் சாமியாராகாமல் அரசியலில் புகுந்து அனைவரையும் ஏமாற்றியிருக்கலாம். பெண்ணாசை வந்தால் கள்ளக்காதல் செய்து காலத்தை ஓட்டி இருக்கலாம். மட்டமான மசாலா படங்களில் நடித்து மக்களின் மனதை கெடுத்திருக்கலாம். இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?
சன் டிவியில் என் படத்தை சகட்டு மேனிக்கு போட்டு சந்தி சிரிக்க வைத்தார்கள்..... ஓடினேன்..! என் மடங்களில் புகுந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார்கள்... ஓடினேன்...!! என் பேனர்களை எரித்து என்னை கொலை வெறியோடு தேடினார்கள்.. யூட்யுப்-ல் என் வீடியோவுக்கு மட்டும் ஏகப்பட்ட ஹிட்டுகளை கொடுத்தார்கள்..ஓடினேன்..!! கள்ளச்சாமியாரை கைது செய்ய வேண்டும் என்று கலகம் செய்தார்கள் ஓடினேன்..!!
ஓடினேன்... ஓடினேன்... ஹரித்துவாரின் கடைசி எல்லை வரைக்கும் ஓடினேன்.. ஆனால் எத்தனை ஓடியும் இந்த எடுபட்ட தமிழ் நாட்டு போலீஸ் என்னை எப்படியோ அமுக்கி பிடித்து விட்டது..!! புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து விட்டேன்..!!
சரியான அரசு சன் டிவியின் வீடியோ ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும். என் வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும்..இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா இந்த நித்யானந்தாவை..?!!
துறவியாக இருந்து கொண்டு ஆடை களைந்து அழகியுடன் சல்லாபித்தது ஒரு குற்றம். ஆசிரம் அமைப்பதற்காக அடுத்தவன் நிலத்தை அபகரித்தது ஒரு குற்றம். ஆன்மீகம் என்ற பெயரில் அத்தனை மக்களின் நம்பிக்கையை நாசமாக்கியது ஒரு குற்றம். காணிக்கை என்ற பெயரில் கணக்கிடலங்கா கருப்பு பணம் சேர்த்தது ஒரு குற்றம்..!!
இத்தனை குற்றங்களுக்கும் யார் காரணம்..?
பாலாஜி சக்திவேல் பட ஹீரோ போல் இருந்த என்னை துறவியென நம்பியது யார் குற்றம்.? சாமியார் வேஷம் போட்டு காசு பார்க்க நினைத்த என் குற்றமா..? இல்லை..எத்தனை டுபாக்கூர் சாமியார்கள் மாட்டினாலும், மறு நிமிடமே மறந்து விட்டு மீண்டும் மீண்டும் நம்பும் முட்டாள் மக்களின் குற்றமா..?
நடிகையுடன் சல்லாபித்தது யார் குற்றம்..? ஜாலியாக இருந்து இவ்வுலகிலேயே சொர்க்கலோகத்தை சுகிக்க நினைத்த என் குற்றமா.? இல்லை..பணத்துக்காக என்னிடம் பல்லைக்காட்டி படுக்கையில் விழுந்த நடிகையின் குற்றமா.?
பல கோடி ரூபாய் பணம் சேர்த்தது யார் குற்றம்..? நான் உண்டு என் லீலைகள் உண்டு என்று இருந்த என் குற்றமா..? இல்லை..சாமியார் என்றாலே சாக்கு பையில் பணத்தை கொண்டு வந்து கொட்டும் ஏமாளிகள் குற்றமா.?
இக்குற்றங்கள் களையப்படும் வரை நித்யானந்தாக்களும், ரஞ்சிதாக்களும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்..!!! நன்றி... வணக்கம்..!!

0 comments:
Post a Comment