Posted by
frozali
at
7:07:00 pm
பிரபல ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட முதல் மொபைல் ஐ-போன் ஆகும். மொபைல் சந்தையில் கையால் தொட்டு இயக்கும் புதிய தொழில்நுட்பம் என்பதால் ஆளாளுக்கு அதை போட்டி போட்டு வாங்கினார்கள்.
ஆனால் ஏகப்பட்ட குறைபாடுகளுடன் அதாவது கொடுத்த காசுக்கு உரிய மதிப்பில் வசதிகள் இல்லாத போனாகத்தான் ஐ-போன் இருந்து வந்தது. இதன் விளைவாக இப்போது ஆப்பிள் தனது மொபைல் பிரிவில் ஐ-போன் 3GS என்ற பெயரில் புதிய போனை அறிமுகப்படுத்த உள்ளது.மேலும் ஐ-போனில் உள்ள மிகப்பெரிய பிரச்சனையே அதன் விலைதான்.இதனால் அந்த போனை குறைந்த அளவிலேயே வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் தனது சந்தை பங்களிப்பை அதிகரிக்க இப்போது ஆப்பிள் தனது போன்களின் விலையை அதிரடியாக குறைக்க முடிவு செய்துள்ளது..
ஐ-போன் விலை விபரம் : (இந்திய பணமதிப்பில்)
முந்தைய ஐ-போன் 3G (8GB) யின் விலை : 5000/- ரூபாய்
அறிமுகமாகவிருக்கும் ஐ-போன் 3GS (16GB) யின் விலை - 10,000/- ரூபாய்
ஐ-போன் 3GS (32GB) யின் விலை - 15,000/- ரூபாய்.
மேலும் இந்த விலை அமெரிக்காவின் AT&T மொபைல் நிறுவனத்தின் ஒப்பந்த அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.மற்ற நாடுகளில் விலை எவ்வளவு என்பதை ஆப்பிள் நிறுவனம் தங்கள் இணையதளத்தில் குறிப்பிடவில்லை.
இதனால் இந்த விலை உலகம் முழுவதும் கண்டிப்பாக இருக்காது. அதுவும் இந்திய மதிப்பில் 5000/- ரூபாய்க்கு ஆப்பிள் ஐ-போன் இந்தியாவில் கிடைத்தால் அதை விட கின்னஸ் சாதனை நிகழ்வு எதுவும் இருக்க முடியாது.அதனால் இந்த விலை குறைப்பு என்பது உலகம் முழுவதும் என்பது உண்மையான தகவலாக இருக்க வாய்ப்பே இல்லை. ஐ-போன் 3G க்கும், ஐ-போன் 3GS க்கும் தொழில்நுட்ப வசதிகளில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. புதிய ஐ-போன் வருகிற 19 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆப்பிள் நிறுவனம் முதலில் அறிமுகப்படுத்திய EDGE வசதியுடன் கூடிய ஐ-போனின் விற்பனையை நிறுத்திவிட்டது.
புதிய ஐ-போனின் வசதி விபரங்களை காண கீழே உள்ள லிங்கை "கிளிக்" செய்யுங்கள்.
http://www.apple.com/iphone/iphone-3g-s/
புதிய ஐ-போனின் வீடியோவை காண கீழே உள்ள லிங்கை "கிளிக்" செய்யுங்கள்
http://www.youtube.com/watch?v=AcigqYci7Ss&feature=player_embedded
..................................................................................
0 comments:
Post a Comment